ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியங்களை புத்தக வடிவில் கொண்டு வந்த தமிழ் தாத்தா உ.வே.சா.வின் 122வது பிறந்தநாள் நேற்று அவர் பிறந்த ஊரான உத்தமதானபுரத்தில் உள்ள நினைவு இல்லத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் பங்கேற்று, உ.வே.சா. சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பதிவாளர் பன்னீர்செல்வம், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.