திருவாரூர் மாவட்டம், பெருங்குடி ஊராட்சியில் "உங்கள் கனவை சொல்லுங்க" திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் த. ஆனந்த் மற்றும் மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது கூடுதல் ஆட்சியர் செல்வி. பல்லவி வர்மா உடனிருந்தார். தன்னார்வலர்கள் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேடியாக சென்று விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர்.