திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் தலைமையில், புதிதாக மனு கொடுக்க வந்த 20 மனுதாரர்களிடம் நேரடியாக புகார் மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த கூட்டத்தில் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அதிகாரிகள் செயல்பட்டனர்.