திருவாரூரில் மருந்து வணிகர்கள் ஆர்ப்பாட்டம்

0பார்த்தது
திருவாரூரில் மருந்து வணிகர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் மருந்து வணிகர்கள் இன்று ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டன. ஆன்லைன் மூலம் வலி நிவாரணி, தூக்க மாத்திரைகள் எளிதில் கிடைப்பதால் இளம் தலைமுறையினர் அடிமையாவதாகவும், கருக்கலைப்பு மருந்துகளால் உயிரிழப்புகளும் சமூக பாதிப்புகளும் அதிகரிப்பதாகவும் மருந்து வணிகர்கள் குற்றம் சாட்டினர். திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி