திருவாரூர் மாவட்டம் குளிக்கரை அருகே தென்புலியூரை சேர்ந்த ராஜமாணிக்கம் என்ற முதியவர் சம்பவத்தன்று டீ குடிப்பதற்காக மன்னார்குடி திருவாரூர் சாலையில் வந்துள்ளார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் முதியவர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ராஜமாணிக்கத்தின் மகன் மதியழகன் கொரடாச்சேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த முதியவர் ராஜமாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேதா பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.