திருவாரூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. திருவாரூர் நகர், புறநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மின் நுகர்வோர் பங்கேற்று தங்கள் குறைகளை நேரில் விண்ணப்பம் மூலம் அளித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.