திருவாரூர்: தொழிற்பயிற்சி நிலைய மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

345பார்த்தது
திருவாரூர் மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை இம்மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார். நீடாமங்கலம் அருகே நகர் கோட்டூர், கிடாரம் கொண்டான் பகுதிகளில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேலும் விவரங்களுக்கு skilltraining.tn.gov.in இணையதளத்தைப் பார்க்கலாம் அல்லது 9865072426, 9499055742 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி