மண் சட்டியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

0பார்த்தது
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி விவசாயிகளுக்கான பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். "சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்" என்ற பழமொழியை சுட்டிக்காட்டி, தங்களுக்கு எதுவும் இல்லை எனக் கூறி வெறும் பானையை கையில் ஏந்தி, அதில் நாமமிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.