திருவாரூர் நகரின் தெற்கு வீதி பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் முதல் மாடியில் இயங்கி வந்த பிரபல தனியார் பியூட்டி பார்லரில் இன்று காலை மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. காலை 10 மணியளவில் ஊழியர்கள் மின் சாதனங்களை இயக்கியபோது தீ பரவியது. இதனால் அலறி அடித்து வெளியேறிய ஊழியர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான அழகு சாதனப் பொருட்கள் சேதமடைந்தன. சென்னையில் இதே போன்ற தீ விபத்து நடந்த நிலையில், திருவாரூரில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.