திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டம், அம்மையப்பன் வருவாய் கிராமம், இளங்குடி குக்கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 11 நபர்களுக்கு இலவச அரசு வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வ. மோகனச்சந்திரன் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி. கே. கலைவாணன் ஆகியோர் வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்கள்.