திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி நேற்று மாலை சென்ற அரசு பேருந்து, வண்டாம்பாளை பகுதியில் முன்னால் சென்ற ஆட்டோ மீது மோதியது. பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது பேருந்து மோதியதில், ஆட்டோவில் பயணித்த 6 பள்ளி மாணவர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக மீட்கப்பட்ட அவர்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.