கூத்தாநல்லூர்: பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு இந்துக்கள் சீர்வரிசை

183பார்த்தது
கூத்தாநல்லூர் அருகே பொதக்குடியில் 50 ஆண்டுகள் பழமையான உமர் பின் கத்தாப் பள்ளிவாசல் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவையொட்டி, மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், பொதக்குடி அருகே உள்ள ஆய்க்குடி, அகரபொதக்குடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த இந்து மதத்தினர், மேள தாளங்கள் முழங்க 150 தட்டுகளில் பூ பழங்கள், இனிப்பு வகைகள், வாழைத்தார்கள் உள்ளிட்ட சீர்வரிசைகளுடன் பள்ளிவாசலுக்கு ஊர்வலமாக வந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி