உரிமை தொகை கொடுக்க நிதி உள்ளது சம்பளம் கொடுக்க நிதி இல்லையா

0பார்த்தது
திருவாரூர் அருகே கிடாரம் கொண்டான் திருவிக அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று கல்லூரி வாயில் முன்பு உள்ளிருப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றம் உறுதி செய்த யுஜிசி நிர்ணயித்த ஊதியம், பணி பாதுகாப்பு, 12 மாத சம்பளம், மகப்பேறு விடுப்பு, பணிக்கொடை, பிஎஃப் மற்றும் இபிஎஃப் வழங்க கோரியும், தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது. "பராசக்தி பார்க்க நேரம் இருக்கிறது, எங்கள் செய்தி பார்க்க நேரமில்லையா? உரிமை தொகை கொடுக்க நிதி உள்ளது. சம்பளம் கொடுக்க நிதி இல்லையா?" என முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி