திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கீழநாகை கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ ஆகாச காளியம்மன் கோவிலில் வியாழக்கிழமை விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், முதல் மற்றும் இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து இன்று காலை நான்காம் கால யாக பூஜை, கோ பூஜை, மகா பூர்ணாகுதிக்குப் பிறகு, தீட்சதர்கள் புனித கடங்களை தலையில் சுமந்து ஆலயத்தை சுற்றி வலம் வந்து விமான கோபுரத்தின் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். இதைத் தொடர்ந்து மூலவர்களான முருகன் மற்றும் விநாயகருக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் மன்னார்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.