கூத்தாநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கக்கூடிய தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த - அய்யம்பேட்டை, தண்ணீர்குன்னம், ரோட்டுத்தெருவை சேர்ந்த தங்கராசு மகன் அய்யப்பன் (வயது - 38) என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையிலடைக்கப்பட்டார்.
மேற்கண்ட நபர் விற்பனைக்காக வைத்திருந்த கூலிப், ஹான்ஸ், விமல் மற்றும் பான்மசாலா என 47 கிலோ (மதிப்பு ரூ. 52,000) குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்பாக செயல்பட்டு எதிரியை கைது செய்து, தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட் பாராட்டினார். பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் கஞ்சா, தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, மது குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட் கடுமையாக எச்சரித்துள்ளார்.