திருவாரூர் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி செய்த புதுபத்தூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த நடராஜன் (வயது-57) என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் வழக்கின் விசாரணை திருவாரூர் தலைமை நீதிமன்ற நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கில் எதிரிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 6,000/- அபராதமும் விதித்து திருவாரூர் தலைமை குற்றவியல் நீதிமன்ற நடுவர் தீர்ப்பு வழங்கினார்கள். மேலும் இவ்வழக்கில் சிறப்பாக விசாரணை மேற்கொண்ட காவல் அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், பாராட்டினார்கள்.