மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் மன்னார்குடி நகர கழகம் சார்பில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் தாயார், மது ஒழிப்பு போராளி மாரியம்மாளின் 10ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. ப. பாலச்சக்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மதிமுகவினர் மெழுகுவர்த்திகளை ஏந்தி வீரவணக்கம் செலுத்தினர். மாரியம்மாளின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.