திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறையின் சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் தோட்டக்கலை பயிர்களின் நவீன தொழில்நுட்பம், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த மாவட்ட கருத்தரங்கு நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வ. மோகனச்சந்திரன் தலைமை வகித்த இந்த கருத்தரங்கில், வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் பூச்சி, நோய் மேலாண்மை குறித்து விளக்கினர். திரளான விவசாயிகள் இதில் பங்கேற்றனர்.