நீடாமங்கலம்: நீதிமன்ற வளாகத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவன்

0பார்த்தது
நீடாமங்கலம்: நீதிமன்ற வளாகத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவன்
நீடாமங்கலம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை, கூலித்தொழிலாளி அரிகிருஷ்ணன் (60) தனது 2-ஆவது மனைவி செல்வி (55) மீது மதுபோதையில் தகராறு செய்து கத்தியால் குத்த முயன்றாா். இதில் செல்விக்கு கையில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்த போலீஸாா் மற்றும் வழக்குரைஞா்கள் அரிகிருஷ்ணனைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். காயமடைந்த செல்விக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி