பொதக்குடியில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த உமர் பின் கத்தாப் பள்ளிவாசல், சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக புனரமைக்கப்பட்டு நேற்று சிங்கப்பூர் தொழிலதிபர் அப்துல் அஜீஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த விழாவில் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் மற்றும் எஸ். டி. பி. ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.