மன்னார்குடியில் பேட்டரி திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

0பார்த்தது
மன்னார்குடியில் பேட்டரி திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வீடுகளில் அடிக்கடி இன்வெர்ட்டர் பேட்டரிகள் திருடு போன சம்பவங்களைத் தொடர்ந்து, மன்னார்குடி போலீசார் விசாரணை நடத்தினர். ஆர். பி. சிவம் நகர் பகுதியில் ஒரு வீட்டில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த அப்துல்லா என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர் பல்வேறு பகுதிகளில் வீடுகளில் புகுந்து பேட்டரி, இன்வெர்ட்டர் போன்றவற்றை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அப்துல்லா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி