பேரளத்தில் உள்ள வேலங்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை, சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதனால், வேலங்குடி, நல்லாடை, காலியாக்குடி, திருக்கொட்டாரம், சங்கமங்கலம், கடகம், சிறுபுலியூர், முகுந்தனூர் ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் தடைபடும். மேலும் வேலங்குடி, அதம்பார், உள்ளிட்ட துணை மின் நிலையங்களிலும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின் வினியோகம் பெறும் பகுதிகளில் மின் தடை ஏற்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.