குடிமனை பட்டா வழங்க வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்

134பார்த்தது
குடிமனை பட்டா வழங்க வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்
திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல தலைமுறைகளாக சொந்த வீடு கட்டியும் இடம் இல்லாமல் வாழும் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும். சொந்தமாக வீடு கட்டி வாழும் மக்களின் இடங்களை கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்புகள் என்று கூறி அச்சுறுத்தும் இந்து சமய அறநிலைய துறையையும், சட்டப்பிரிவு 78, 79 ஆகியவற்றை தமிழக அரசு ரத்து செய்ய சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் பொதுமக்கள் ஏராளமானோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி