திருவாரூரில் நகராட்சி விரிவாக்கத்தை கண்டித்து திருவாரூரில் ஆர்ப்பாட்டம்

79பார்த்தது
திருவாரூரில் நகராட்சியுடன் இணைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூரில் நகராட்சியை விரிவாக்கம் செய்வதற்காக தமிழக அரசு வேலங்குடி, புலிவலம், அம்மையப்பன், காட்டூர், கீழக்காவதுக்குடி, பெருந்தரக்குடி உள்ளிட்ட ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்க அறிவிப்பானை வெளியிட்டுள்ளது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நகராட்சியுடன் இணைக்கப்படுவதால் பாதிக்கப்படும் கிராம மக்கள் தங்களது 100 நாள் வேலை திட்டம், அரசின் இலவச வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட கிராமப்புற சலுகைகள் பறிக்கப்படும் என்றும் வீடு முதல் அனைத்திற்கும் வரிகள் அதிகரிக்கப்படும் என்றும் என தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என வலியுறுத்தி இன்று திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது 300க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் என கலந்து கொண்டு வேண்டாம் நகராட்சி, வேண்டும் ஊராட்சி என முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி