திருவாரூரில் தஞ்சை நாகை தேசிய நெடுஞ்சாலையில் வாளவாய்க்கால் பகுதியில் இருந்த பேருந்து நிறுத்தம் பழுந்தடைந்ததால் அகற்றப்பட்டது. இதனால், நாகை, கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல பேருந்துக்காகக் காத்திருக்கும் மக்கள் வெயிலிலும் மழையிலும் பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். எனவே, அப்பகுதியில் புதிய பேருந்து நிறுத்தம் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.