திருவாரூர் மாவட்டம் கூத்தனூர் அருகே பூதமங்கலத்தில் சாலைகளில் கொட்டப்படும் குப்பைகளால் பன்றிகள், குதிரைகள் சாலையை கடந்து விபத்துகள் ஏற்படுவதாகவும், துர்நாற்றம் வீசி நோய் தொற்று ஏற்படும் சூழல் நிலவுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். குப்பைகளை அகற்றி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சேகரிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.