தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன், காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை கொள்முதலில் ஏற்பட்ட குளறுபடியால் அறுவடை தாமதமாகி, சம்பா சாகுபடி பணிகள் துவங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். வாக்காளர் திருத்தப் பணியில் கிராம நிர்வாக அலுவலர்கள் முழுமையாக ஈடுபட்டுள்ள நிலையில், காப்பீடு செய்ய சிட்டா, அடங்கல் பெறுவதில் தடை ஏற்பட்டுள்ளது. எனவே, நவம்பர் 31 வரை காப்பீடு செய்ய கால நீட்டிப்பு வழங்கி விவசாயிகளை பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.