நீலக்குடியில் சர்தார்வல்லபாய் படேல் 150ஆவது பிறந்தநாள் விழா

1பார்த்தது
நீலக்குடியில் சர்தார்வல்லபாய் படேல் 150ஆவது பிறந்தநாள் விழா
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, திருவாரூரில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் மை பாரத் கேந்திரா மற்றும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் இணைந்து 'சர்தார் 150 பாத யாத்திரை'யை நவம்பர் 25 அன்று நடத்தினர். திருவாரூர் நீலக்குடி கேந்திர வித்யாலயா பள்ளியிலிருந்து தொடங்கிய இந்தப் பாத யாத்திரை, சுமார் 8 கி.மீ தூரம் சென்று மத்திய பல்கலைக்கழக எம்.ஆர். அரங்கில் நிறைவடைந்தது. இதில், தேசிய ஒற்றுமை, சுய சார்பு மற்றும் போதைப் பொருள் தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழிகள் எடுக்கப்பட்டன. சர்தார் படேலின் 'இந்தியா ஒன்றுபட்டது, இந்தியா என்றென்றும் ஒற்றுமையாக இருக்கும்' என்ற நம்பிக்கை மாணவர்களிடையே எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி