பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சி.. கல்வித் தரத்தை உயர்த்த ஆலோசனை

160பார்த்தது
பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சி.. கல்வித் தரத்தை உயர்த்த ஆலோசனை
திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த கல்வி அலுவலர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு பள்ளி மேலாண்மைக் குழு செயல்பாடுகள் குறித்து ஒரு நாள் பயிற்சி திருவாரூரில் இன்று (பிப்.09) நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுகப்பிரியா தலைமை தாங்கி, பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் கல்வித் தரத்தை உயர்த்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கினார். மாநில திட்ட இயக்ககத்தின் கருத்தாளர்கள் பயிற்சி அளித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு ஏபிஓ சுரேஷ்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி