திருவாரூர் மாவட்டம் மணவாளநல்லூர் பகுதியில் எரவாஞ்சேரி போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனையிட்டதில், அட்டைப் பெட்டிகளில் 180 மிலி அளவுள்ள 158 மதுபாட்டில்கள் கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. மதுபாட்டில்கள் கடத்தி விற்பனையில் ஈடுபட்ட கண்டிரமாணிக்கம், ரமேஷ்குமார், தெய்வசிகாமணி, ராமன், ராமகிருஷ்ணன் ஆகியோரை போலீஸார் கைது செய்து, மதுபாட்டில்களையும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.