திருவாரூர்: பெயிண்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவர்கள் கைது

232பார்த்தது
திருவாரூர்: பெயிண்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவர்கள் கைது
திருவாரூர் மாவட்டம் ஆணைவடபாதியைச் சேர்ந்த பெயிண்டர் சத்தியசீலன் அம்மையப்பனில் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவர் மீது மோதினர். இதைத் தட்டிக் கேட்டதால், இளவரசன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் கட்டையால் தாக்கி காயப்படுத்தினர். திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சத்தியசீலன் அளித்த புகாரின் பேரில், கொரடாச்சேரி போலீசார் விபத்தை ஏற்படுத்தி தாக்கிய இருவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி