திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கத்தில் நடைபெற்ற 4 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவில், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளை கல்வித்துறை அதிகாரிகள் அரசு பேருந்துகளில் அழைத்துச் சென்றனர். மதிய உணவுக்காக அழைத்துச் செல்லும்போது, ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இருந்து கிளம்பிய அரசு பேருந்து திடீரென நின்றுவிட்டது. பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர், பேருந்தில் இருந்த மாணவர்களை இறக்கி பேருந்தை தள்ளச் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.