திருவாரூர் மாவட்டத்திலுள்ள 3,92,203 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சீனி, ஒரு முழு கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று (ஜனவரி 9) தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 789 நியாய விலை கடைகளில் உள்ள 392203 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ மற்றும் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் இணைந்து வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் நகர் மன்ற உறுப்பினருமான வாரை பிரகாஷ், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவரும் ஒன்றிய செயலாளருமான சேகர் கலியபெருமாள், நகர் மன்ற தலைவர் புவனபிரியா செந்தில், கூட்டுறவு இணைப்பதிவாளர் சித்ரா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்