திருவாரூர் வட்டம் செம்மங்குடி அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் திருத்தம் மற்றும் நீக்கல் முகாமையும், திருவாரூர் வேலுடையார் பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் தீவிர திருத்தப் பணியையும் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் வ. மோகனச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.