திருவாரூர்: 100 பயணிகளுடன் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து

0பார்த்தது
திருவாரூர்: 100 பயணிகளுடன் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து
திருவாரூரில் இருந்து திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்ற நகரப் பேருந்து, திருநெய்ப்பேர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு, காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 80 வயது மூதாட்டிக்கு தலையில் காயம் ஏற்பட்டு உள்நோயாளி பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.