திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் விவசாயிகள் குறுவைப் பயிரை காப்பீடு செய்வதற்கு இன்று வியாழக்கிழமை 31ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு செய்ய தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கங்கள், இ-சேவை மையங்கள், தேசிய பயிர் காப்பீட்டு இணையதளங்களில் உள்ள 'விவசாயிகள் கார்னர்' பகுதியில் நேரடியாக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும் பயிர் காப்பீடு குறித்த தகவல்களை பெற www.pmfby.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடவும்.