திருவாரூர் மாவட்டம் சேங்காளிபுரம் பகுதியில், மது போதையில் வீட்டிற்குள் புகுந்த 6 பேர், எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த திருமுருகன் என்பவரை அவரது மகள் கண் முன்னே வெட்டிக்கொலை செய்தனர். மகளின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி கொலையை பார்க்க வைத்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த தாக்குதலில் திருமுருகனின் மனைவி மற்றும் மகனும் காயமடைந்ததால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.