திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சித்தன்வலூர் கிராமத்தைச் சேர்ந்த குருமூர்த்தி தனது மனைவி மகேஸ்வரியுடன் (42) கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மகேஸ்வரி அணிந்திருந்த சேலை மோட்டார் சைக்கிளின் பின் சக்கரத்தில் சிக்கியதில், அவர் தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.