திருவாரூர் தொகுதி, திமுகவின் வலுவான கோட்டையாகத் திகழ்கிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி இங்கு இருமுறை வெற்றி பெற்றுள்ளார். அவருக்குப் பிறகு பூண்டி கலைவாணன் இந்த பாரம்பரியத்தைத் தொடர்கிறார். 1971 மற்றும் 1977ல் தாழை.மு. கருணாநிதி திமுக சார்பில் வெற்றி பெற்றார். கருணாநிதி என்ற பெயருடன் நெருங்கிய தொடர்பு கொண்ட இந்தத் தொகுதியில் திமுக 9 முறை வென்றுள்ளது. அதிமுக ஒருமுறை கூட இங்கு வெற்றி பெற்றதில்லை.