திருவாரூர் மாவட்டத்தில் மீன் மற்றும் இறைச்சி வகைகளின் இன்றைய விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டு கொண்டை மீன் கிலோ 200 ரூபாய், விரால் மீன் கிலோ 500 ரூபாய், வஞ்சிரம் கிலோ 800-1000 ரூபாய், பாறை கிலோ 500 ரூபாய், கொடுவா கிலோ 600 ரூபாய், வவ்வால் கிலோ 1200-1500 ரூபாய், இரால் கிலோ 400 ரூபாய், நண்டு கிலோ 400 ரூபாய் என மீன் வகைகள் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மேலும், பிராய்லர் கோழி கிலோ ரூ. 250, நாட்டுக்கோழி (உயிருடன்) கிலோ ரூ. 500, ஆட்டுகறி கிலோ ரூ. 1000 என இறைச்சி வகைகளின் விலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.