போலீஸ் என கூறிக்கொண்டு ரயில் பெட்டியின் மாற்றுத்திறனாளிகள் பகுதிக்குச் சென்ற நபர் மாற்றுத்திறனாளியை தாக்கும் வீடியோ பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி 1 ஆம் தேதி இரவு மன்னார்குடியில் இருந்து சென்னை எக்மோர் செல்லும் மன்னை விரைவு ரயில் திருவாரூர் ரயில் நிலையத்தில் நின்றது. அப்போது ரயிலின் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் ரயில்வே காவலர் எனக் கூறிக்கொண்டு மூன்று நபர்கள் ஏறினர்.
மாற்றுத்திறனாளி பெட்டியில் கதவை திறக்கவில்லை எனக் கூறி ஒரு கால் முற்றிலும் அகற்றப்பட்ட மாற்றுத்திறனாளியை நபர் ஒருவர் தாக்கியுள்ளார். இதுகுறித்து ரயில்வே காவலர்களிடம் புகார் அளித்து உரிய வீடியோவை காட்டிய பிறகும் எவ்வித துரித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்பட்ட நிலையில் மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்தில் நின்ற போது இரண்டாம் நிலை பெண் காவலர் பாதிக்கப்பட்டவரிடம் முகவரியை மட்டும் பெற்றுக் கொண்டு அனுப்பி வைத்துள்ளார்.
காவலர் என கூறி ரயிலில் பயணித்த மாற்றுத்திறனாளி தாக்கிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாற்றுத்திறனாளியை தாக்கிய காவலர் நீடாமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் பழனி என்பதும் இவர் மாற்றுத்திறனாளியை தாக்கும் வீடியோ வெளியாகி காண்பவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.