
திருவாரூர்: பைக்கிலிருந்து தவறி விழுந்து முதியவர் உயிரிழப்பு
திருவாரூர் மாவட்டம் சுரக்காயூர் சொந்த ஊராகக் கொண்ட நிரவி கோயில்பத்து பகுதியைச் சேர்ந்த செல்வகணபதி (66), மதுபோதையில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றபோது, நிரவி முதல் சாலை ஓஎன்ஜிசி கேட் அருகே நிலைதடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து உறவினர் குமாரசாமி அளித்த புகாரின் பேரில், திருப்பட்டினம் சாலை போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.































