
மன்னார்குடி: உடல் தானம் செய்தவர்களை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
மன்னார்குடியைச் சேர்ந்த ராமசாமி, கிருஷ்ணமூர்த்தி, நடராஜன், தனச்செல்வம், சுந்தரம், தமிழரசி, தங்கமணி ஆகிய 7 மூத்த குடிமக்கள், நேசக்கரம் பொதுநல அமைப்பின் வழிகாட்டுதலின்படி, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களின் மருத்துவப் படிப்புக்காக தங்கள் உடலை தானமாக வழங்க முன்வந்துள்ளனர். இந்தச் செயலை அறிந்த திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண்கரட், அவர்களை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.





























