புதிதாக 8,000 மருத்துவமனைகளைத் திறப்பதற்கு இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனும் தவெக அரசின் அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாக சீமான் கூறியுள்ளார். மேலும், “அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, மருத்துவத்துறையை தனியார்மயத்துக்கு தாரை வார்த்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கண்மூடித்தனமாகத் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் அரசின் இந்த செயல்பாடு வாக்குச் செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்யும் துரோகம்” என்றார்.