இன்று தாக்கல் செய்யப்பட்ட TNBudget2026 'Blast'ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு 'Waste'ஆகவே அமைந்துள்ளது என
திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது திராவிட மாடல் திட்டங்களின் 'ரீமேக்' பட்ஜெட் என்றும், விவசாயிகள், மின்கட்டணம், விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளுக்கோ, மாநிலத்தின் வளர்ச்சிக்கோ எந்தத் திட்டமும் இல்லை என்றார். ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை, பயிர்க்கடன் தள்ளுபடி போன்ற முக்கிய வாக்குறுதிகளும் விடுபட்டுள்ளதால், இது ஒரு புஸ்வாண பட்ஜெட் என சாடியுள்ளார்.