சென்னை கொளத்தூரில் கபாலீசுவரர் கல்லூரி விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர், "பிப்ரவரி மாதம் மற்றவர்களுக்கு சாதாரணமானது, ஆனால் திமுகவிற்கு இது மாநாடுகளின் மாதம். மக்கள் நலத் திட்டங்களிலும், மாநாடுகளிலும் திமுகவின் வேகம் குறையவில்லை" என தெரிவித்துள்ளார். மேலும், ஆன்மிக கல்லூரியையும், கல்வியையும் ஒருங்கிணைத்து செயல்படுவதே திராவிட மாடல் ஆட்சியின் வெற்றி என்று அவர் கூறியுள்ளார்.