புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 21 வயது இளைஞர், ‘இதுவே எனது கடைசி தீபாவளி’ என உருக்கமாக கூறியுள்ளார். 2023ஆம் ஆண்டு இவருக்கு பெருங்குடல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவர்கள் இவருக்கு ஒரு வருடத்திற்கு மேல் ஆயுள் இருக்க வாய்ப்பில்லை என கூறியுள்ளனர். இந்த மனவேதனையில், அந்த இளைஞர் Reddit தளத்தில் உருக்கமான பதிவை பகிர்ந்தார். அதில், "இதுவே என் கடைசி தீபாவளி; இந்த தீபங்களின் வெளிச்சத்தையும், மகிழ்ச்சியையும் மீண்டும் பார்க்க முடியாது" என குறிப்பிட்டுள்ளார்.