கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று (ஜூலை.12) ’We The Leaders' அமைப்பு சார்பாக மாநாடு நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட அமைப்பின் தலைவர்
அண்ணாமலை, போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிலையில், இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “பொள்ளாச்சியில் இன்று நடைபெற்ற போதை விழிப்புணர்வு மாநாட்டில் பெருந்திரளாக வந்து பங்கேற்ற என் அன்பு சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சாரந்த நன்றிகள். இந்த எழுச்சி, ஒரு புதிய வரலாற்றின் தொடக்கம்” என குறிப்பிட்டுள்ளார்.