தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, ஒரு ரசீதுக்கு அதிகபட்சமாக 25 குவார்ட்டர் அல்லது 12 பீர் பாட்டில்கள் மட்டுமே வழங்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது. தனிநபர் ஒருவர் ஒட்டுமொத்தமாக 9 லிட்டர் ஒயின் மட்டுமே வாங்க முடியும் என்ற நிலையில், முறைகேடுகளை தவிர்க்க பணியாளர்கள் இந்த விதிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் மதுபானங்கள் சட்டவிரோதமாக பதுக்கப்படுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.