புதிய BNS சட்டத்தின் கீழ் அரசு சொத்துக்களை சேதப்படுத்தினால் ஓராண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளும் சேர்த்து விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், சேதப்படுத்தப்பட்ட சொத்தின் மதிப்பு ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால் 2 ஆண்டுகள் வரையும், ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் 5 ஆண்டுகள் வரையும் சிறைத்தண்டனை விதிக்கப் பிரிவுகள் வழிவகை செய்கின்றன.